நாளை மகாமக விழாவை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கும்பகோணத்தில் மகாமக விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும். அதை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகம் குளத்தில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பக்தர்கள் அனைவரும் புனித நீராட வருவார்கள் இதைத்தொடர்ந்து கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெறும்.
நாளை நடைபெற இருக்கும் மகாமக விழாவை தொடர்ந்தது கும்பகோணத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு ஆராதனை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அழைக்கப்படுவதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.