இயக்குனர் அமீர்க்கு சொந்தமான அலுவலகம் உட்பட 25 இடங்களில் அமலாக்க துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள முன்னாள் திமுக நிர்வாகியின் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் மூலம் கடந்த மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஜாபருக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமீர் இயக்கத்தில் வெளிவந்த இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படம் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அமீர் மற்றும் ஜாபர் இருவரும் இணைந்து சில தொழில்களும் செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி தரப்பிலிருந்து இயக்குனர் அமீருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது அதன்படி இயக்குனர் ஆமீர் டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகும் படி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் நேரில் ஆஜரானார்.
போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பிலிருந்து பல மணி நேரம் இயக்குனர் அமீரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த விசாரணைக்கு பின்பு இயக்குனர் அமீர் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் தற்பொழுது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் ஜாபர் சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து ஜாபர் உறவினர் மற்றும் நண்பர்கள் என இயக்குனர் அமீர் உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய நபர்களிடம் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.