தங்கம், அதன் அழகும் மதிப்புமிக்க தன்மையாலும், இந்தியாவில் முக்கியமான முதலீட்டு வாய்ப்பாகவும், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. காலத்துக்கு காலம், தங்கத்தின் விலை பல்வேறு பொருளாதார, அரசியல், சமூக காரணிகளால் மாற்றமடைந்து வருகிறது.
தங்கத்தின் விலை வரலாறு:
1950-களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5.37 மட்டுமே இருந்தது. அதன் பிறகு, 2000-ஆம் ஆண்டில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.440 ஆக உயர்ந்தது. 2023-ஆம் ஆண்டில், 24 கேரட் தங்கத்தின் சராசரி விலை கிராமுக்கு ரூ.5,500-க்கு மேல் இருந்தது. தற்போது தங்கம் விலை மேலும் அதிகரித்து 7000 தொட்டுள்ளது.
தங்கம் விலை
தற்போது தங்கம் விலையில் தொடர்ந்து சில நாட்களாக ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது ஒட்டி இன்று (டிசம்பர் 29) ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹ 7801 ஆகவும் ,ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹7152 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹99 ரூபாய் ஆகவும் 1 கிலோ வெளியின் விலை ₹99,900 ஆகும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது