ஆந்திர மாநிலத்தில் தக்காளியின் விலை கிலோ 3 ரூபாய்க்கு வரை விலை வீழ்ச்சி அடைந்து விட்டது . இதனால் சாலையோரங்களில் தக்காளியை வியாபாரிகள் கொட்டி சென்றனர் .
ஆந்திராவில் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு வியாபாரிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர் . தக்காளி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தக்காளியின் விலை தற்போது குறைந்துள்ளது . கடந்த மாதம் சுமார் 200க்கு விற்பனையான தக்காளி தற்போது கிலோ 3 ரூபாய் வரையில் குறைந்துள்ளதால் விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை . இதனால் மனம் உடைந்து விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் கொட்டி சென்றனர் . அது மட்டும் இன்றி சில விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு உணவாக தக்காளியை கொடுக்கின்றனர் .
தக்காளியின் விலை குறைந்ததால் , தக்காளி பறிக்கும் கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட மிஞ்சவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றன .