திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தில் வாழும் மக்கள் மிகப் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த கிராமத்தில் வாழும் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடராமல் பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
இந்த தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உடனடியாக செயல்பாட்டை தொடங்கினார். இதை தொடர்ந்து பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை கண்டறிந்து 51 மாணவர்களை மீண்டும் பள்ளிப்படிப்பை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த 51 மாணவர்களும் திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் புதூர் ஊராட்சி மன்ற பள்ளியில் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் சீருடைகளை உடனடியாக ஏற்பாடு செய்து வழங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் இந்த செயலால் திருவண்ணாமலை மக்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.