கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் திரையரங்கில் வெளியிடப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் என்ற திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவை விட தமிழகத்தில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் வரும் திரைப்படமாக மஞ்சள்மெல் பாய்ஸ் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
மஞ்சுமலை பாய்ஸ் திரைப்படம் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கொடைக்கானல் குணா குகைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குணா குகையை நோக்கி படையெடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பரத் மற்றும் அவருடைய நண்பர்கள் குணா குகைக்கு சுற்றி பார்க்க வந்துள்ளனர். அந்த மூன்று நபர்களும் குணா குகையில் தடை செய்யப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலையை தாண்டி குதித்து உள்ளே சென்று புகைப்படம் எடுத்துள்ளனர் அதை தொடர்ந்து குணா குகையின் உட்புற பகுதிக்கு செல்ல முயன்ற அந்த மூன்று நபர்களையும் வனத்துறையினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த மூன்று வாலிபர்களையும் கடுமையாக எச்சரித்து மேலே வரவழைத்தார். இதைத்தொடர்ந்து அந்த மூன்று நபர்களையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து அந்த மூன்று நபர்களும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்து ஆர்வம் அடைந்து குணா குகையின் உள்ளே செல்ல முயன்றதாக கூறியுள்ளனர்.
வனத்துறையினர் இவர்களை விசாரித்த பின்பு வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குணா குகை மிகவும் ஆபத்தான பகுதிகள் உள்ளதாகவும் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மீறி உள்ளே செல்வோருக்கு கண்டிப்பாக தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் வனத்துறை ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.