அமைச்சர் க. பொன்முடி மீது சேறு வீசியதால் பரபரப்பு!
க. பொன்முடி எனும் கந்தசாமி தெய்வசிகாமணி ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையின் தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் ஆவார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருவேல்பட்டு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் உண்டான ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத அளவில் மழை பொழிந்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெஞ்ச் புயலானது கரையை கடந்த நிலையிலும் விழுப்புரம் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் இரண்டு நாட்களாகியும் வடியவில்லை.
வெள்ளத்தின் காரணமாக பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு ,குடிநீர் போன்றவை கூட கிடைக்காததனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அமைச்சர் க.பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேறு வீசப்பட்டது.
இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.