திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் முழுவதும் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வரும். தீபத் திருநாள் அன்று பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிப்பதற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலையார் திருக்கோவிலில் இந்த வருடத்திற்கான தீபத் திருநாள் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் எனவே பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆணையின்படி, சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பிற முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு 2700 சிறப்பு பேருந்து வசதி கிடைக்கும் என்றும் 6947 தடவை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று வருவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 40 சிற்றுந்துகள் இயக்கப்படும் என்றும் கட்டணம் இல்லாமல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் பக்தர்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே பதிவு செய்வதற்கு ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.