அரசு பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு பரிசுகளை வழங்க இருப்பதாக போக்குவரத்து கழகம் தற்பொழுது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து தொலைத் தூர போக்குவரத்துகளில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்வதை ஊக்கவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் அரசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்வதற்கு சிறப்பு பரிசை வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 21 முதல் ஜனவரி 20 – ஆம் தேதி வரை TNSTC இணையதளத்தில் முன் பதிவு செய்து பயணிப்போருக்கு குலுக்கல் முறையில் LED டிவி, பிரிட்ஜ், இரு சக்கர வாகனம் போன்றவை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.