ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்த நிலையில் நேற்றைய தினம் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 51,120 – க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 50,960 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 81 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவிற்கு ரூ. 200 உயர்ந்துள்ளதால் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 81 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை மக்கள் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.