தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே 50,000 கடந்த தங்கம் விலை மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இதை தொடர்ந்து மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ள தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்த நிலையில் இன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சென்னையில் ஆபரணம் தங்கத்தின் விலை ரூ. 680 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 51,640 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விளையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 81.60 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.