தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலை ஏற்றத்தை கண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அவ்வப்பொழுது ஏற்றும் இறக்கம் கண்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சவரனுக்கு ரூ. 680 அதிகரித்த நிலையில் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 51,400 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ. 25 குறைந்து ரூ. 6,430 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 51 ஆயிரத்தை கடந்த நிலையில் சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விளையும் தினம் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்றைய தினம் வெள்ளி கிராமிற்கு 40 காசுகள் உயர்ந்து ரூ. 82 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.