தங்கம் விலை கடந்த இரண்டு வருடங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட வந்தது. கடந்த மாதம் வரலாறு காணாத உச்சமாக ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 59 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலையில் கடந்த மூன்று நாட்களாக சரிவை கண்டு வருகிறது. மேலும் நேற்றைய தினம் சவரனுக்கு 320 குறைந்து தற்பொழுது ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 56,360 – க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய தினத்தை தொடர்ந்து இன்றைய தினமும் தங்க விலை சற்று இறக்கம் கண்டுள்ளது. அதை தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ. 880 குறைந்த ரூ. 55,480 – க்கு விற்பனை செய்யப்படுகிறது . கிராம் ஒன்றுக்கு ரூ. 110 குறைந்து ரூ. 6,935 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் குறைந்த 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.