தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். சேமிப்பில் முக்கிய ஒன்றாக கருதப்படும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருந்த போதிலும் இன்று தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய தினம் ரூ. 80 உயர்ந்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. மேலும் தங்கம் கிராமுக்கு ரூ. 20 குறைந்து காணப்படுகிறது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.5,870 – க்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 46,960 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் பெருமளவில் மாற்றம் இல்லை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 77 – க்கும் பார் வெள்ளியின் விலை ரூ. 77,000 – க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.