மார்ச் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடி ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்றைய தினம் ரூ. 200 அதிகரித்த நிலையில் இன்று அதிரடி உச்சத்தை பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 அதிகரித்து ரூ. 47, 520 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 100 அதிகரித்து ரூ.5, 940 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் பெரும் மாற்றம் இல்லை வெள்ளி கிராமுக்கு ரூ. 80 காசுகள் அதிகரித்து ரூ. 77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.