தங்கத்தின் விலை கடந்த ஆண்டு முதலே அதிகரித்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஏற்றத்தை கண்டுள்ளது. சேமிப்பின் முக்கிய ஒன்றாக கருதப்படும் தங்கம் நாளுக்கு நாள் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்த நிலையில், மேலும் இன்றும் அதிகரித்து காணப்படுகிறது.
இதை தொடர்ந்து சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ரூ. 48, 320 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 25 அதிகரித்து ரூ. 6, 040 – க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத இந்த தங்கம் விலை உயர்வு மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி விலையில் பெரும் மாற்றம் இல்லை, வெள்ளி கிராமம் ஒன்றிற்கு 20 காசுகள் உயர்ந்து ரூ. 78 – க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது..