சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கத்திலிருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள தங்கத்தின் விலை மக்களுக்கு பெறும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மார்ச் 5 -ந்தேதி சவரனுக்கு அதிரடியாக ரூ. 680 அதிகரித்த தங்கம் விலை இதைத் தொடர்ந்து மார்ச் 6-ந்தேதி ரூ. 200 மேலும் அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ரூ. 48,720 – க்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 50 அதிகரித்து ரூ. 6,090 – க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது வரலாறு காணாத இந்த தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ. 1,280 உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 50 ஆயிரத்தை நெருங்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.