தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் கலக்கத்திற்கு ஆளாகினர். நேற்று சவரனுக்கு ரூ. 200 அதிகரித்த நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி ரூ. 200 அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது இதைத் தொடர்ந்து ஒரு சவரன் ரூ. 49,000 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 10 குறைந்து ரூ. 6,125 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் பெரும் அளவில் மாற்றமில்லை வெள்ளி கிராம் ரூ. 80 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.