தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம் இறக்கம் என மாற்றம் வந்து கொண்டே இருக்கும் நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு வரலாறு காணாத அளவில் ரூ. 760 அதிகரித்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ரூ. 280 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 49,600 – க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 6,200 – க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் வரலாறு காணாத ப்பு உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 50 ஆயிரத்து நெருங்கும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 79.50 – க்கும் ஒரு பார் வெள்ளியின் விலை 79,500 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.