தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தங்கம் நிலையில் மாற்றம் ஏற்பட்டு விலை குறைய தொடக்கியது. இருந்த போதிலும் இன்று தங்கம் விலை யாரும் எதிர்பாக்காத அளவிற்கு விலை உயர்வை எட்டியுள்ளது.
சர்வதேச தந்தையின் நிலவும் பொருளாதார மாற்றத்தின் அடிப்படையிலேயே தங்கம் விலையில் மாற்றம் ஏற்ப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் தங்கம் விலையில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில் எப்பொழுதுமே தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெற்று வரும். நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு சிறந்த முதலீடாக தங்க சேமிப்பை பார்க்கின்றனர். இன்று ஒரு சவரனுக்கு ஆபரண தங்கம் விலை ரூ. 560 அதிகரித்து சவரன் ரூ. 56,520 க்கும், ஒரு கிராம் ரூ. 7,065 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 2 அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 101 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.