சர்வதேச சந்தையின் பொருளாதார நிலை அடிப்படையிலேயே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது . தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை எப்பொழுதுமே சிறப்பாக காணப்படும். தங்கம் வாங்குவதை ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் முக்கியத்துவம் காட்டி வருகின்றனர். நடுத்தர மக்களின் முதலீடுகளில் தங்கம் முதன்மை வகிக்கிறது.
இதை தொடர்ந்து இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமிற்கு 30 ரூபாய் குறைந்தது ரூ. 6,875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு 240 குறைந்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகிறது. அதை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளி 45 காசுகள் குறைந்து ரூ. 97.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 97, 750 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.