தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் மக்கள் தங்கம் வாங்குவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது நேற்றைய நிலவரத்தின்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து காணப்பட்டது. இன்று மேலும் குறைந்துள்ளதாகவும் இன்றைய நிலவரப்படி 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 80 குறைந்து ரூ.46,560 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 10 குறைந்து ரூ.5,820 – க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி சற்று 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 78 – க்கும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 78,000 – க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது