தென்னிந்திய பகுதியில் நிலவும் மணிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும். டெல்டா பகுதிகள் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. தென் தமிழகத்தில் உள் மாவட்டங்களை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் வறண்ட வானிலே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
வருகின்ற இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. சென்னை பொறுத்தவரை புறநகர் பகுதிகளை வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 25 – 26 டிகிரி செல்சியஸ் பதிவாகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.