திடீரென்று தக்காளியின் விலை தமிழ்நாட்டில் உயர்ந்தது. இதனால் பலர் அவதிக்குள்ளானார்கள் தற்போது மல மலவென்று தக்காளியின் விலை சரிந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து காய்கறியின் வரத்து குறைந்ததனால் சில காய்கறிகள் மற்றும் மல்லிகை பொருட்களின் விலை,அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது… அந்த வரிசையில் தக்காளி சின்ன வெங்காயம் பீன்ஸ் போன்ற காய்கறியின் விலை மலைபோல உயர்ந்தது.
தக்காளியின் விலை உயர்வு காரணத்தால் நடுத்தர மக்கள் ஏழை கடுமையாக பாதித்தது… சாதாரணமாக தக்காளியின் விலை 20 முதல் 30 ரூபாய் விற்று வந்த நிலையில் ஒரேடியாக உயர்ந்து 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.இதனால் ஏழை எளிய மக்கள் கவலை பட்டனர்.
எனவே அதற்காக தமிழ்நாடு அரசாங்கம் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு எடுத்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதனால் மார்க்கெட்டில் விற்பனை குறைந்தது தற்போது ஒரே நாளில் தக்காளியின் விலை ₹40 குறைந்து 80 ரூபாய் விற்பனை செய்து வருகிறது.