தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் தக்காளியின் விலை இமயமலை போல் உயர்ந்தது. சில நாட்களுக்கு முன் தக்காளி கிலோ ரூபாய் 200 வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளி விலை 20 குறைந்து கிலோ 110 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சில சின்ன சின்ன கடைகளில் தற்போதும் தக்காளி 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சின்ன வெங்காயம், பீன்ஸ், பூண்டு இஞ்சி, இதன் விலைகளும் அதிகரித்து வருகிறது.
கோயம்பேடு சந்தையில் இன்றைய விலையில் பீன்ஸ் கிலோ ரூபாய் 30 அதிகரித்து ரூ.110 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது, பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூபாய் 200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இஞ்சியின் விலை ஒரு கிலோவிற்கு ரூபாய் 220 வரை விற்பனையாகிறது. தக்காளியின் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரிப்பதால் மக்கள் இடையே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர் இதனால் தக்காளியின் விலை மீண்டும் ரூபாய் 200 க்கு மேல் போக வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.