சில்லரை சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ.200-ஐ தொட்டுள்ள நிலையில்.500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த தமிழக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளார்.தற்போது மாநிலத்தில் உள்ள 302 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படும்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த முயற்சி ஜூலை 4 முதல் மாநிலம் முழுவதும் 302 ரேஷன் கடைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இப்போது, செவ்வாய்கிழமை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 26ம் தேதி முதல் மாநில கூட்டுறவுத் துறை சார்பில் மானிய விலையில் தக்காளி வழங்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலைவாசி உயர்வைத் தணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பெரியகருப்பன் குறிப்பிட்டார். மேலும், விலைவாசி உயர்வு செயற்கையானது அல்ல, இயற்கையான விளைவு என்றும், இது தரகர்கள் அல்லது வேறு காரணங்களால் ஏற்படவில்லை.
இந்தநிலையில் சென்னையில் செயல்படும் 27 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.