சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. கிலோ 200 விற்றிருந்த தக்காளி தற்போது கிலோ ரூபாய்;120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில மாத காலமாகவே தக்காளியின் விலை அதிகரித்து வந்தது.
தங்கம் மற்றும் வைரத்தின் விலை போல தக்காளியின் நிலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்திருந்தது இதனால் சமைக்கும் குடும்பப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தக்காளியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. தற்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 500 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் ரூபாய் 60க்கு தக்காளியை விற்பனை செய்தார்கள்.
இதை தொடர்ந்து சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைகளில் தக்காளியின் வரத்து அதிகரித்ததால் தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது அதன்படி கோயம்பேடு சந்தையில் நீண்ட நாட்கள் ஆக்கு பிறகு தக்காளியின் விலை 100க்கும் கீழ குறைந்துள்ளது முதல் ரக தக்காளி கிலோ பத்து ரூபாய்க்கு குறைந்தும் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலக தக்காளி கிலோ 20 குறைந்து ரூபாய் 80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்ததால் வரும் நாட்களில் மேலும் தக்காளியின் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மாதத்திற்கு பிறகு தக்காளியின் விலை குறைந்துள்ளதால் குடும்ப பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.