கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டே சென்றது இதனால் இல்லத்தரசிகள் சமைப்பதற்கு தக்காளி சேர்க்காமல் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகினர். தங்கம் விலை போல் தக்காளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை அவ்வப்போது அதிகரிக்கும் குறைந்தும் காணப்பட்டு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிலோ ரூ. 180 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய விலையாக தக்காளி கிலோ ரூ. 120க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ. 20 குறைந்து தக்காளி ஒரு கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விலை குறைவு கோயம்பேடு மார்க்கெட் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து உள்ளதால் தக்காளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.