சென்னையில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவது வழக்கம். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ராஜமன்னார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ரூ. 5 லட்சம் மதிப்புடைய வைர நெக்லஸ் குப்பையுடன் குப்பை தொட்டியில் சேர்ந்துள்ளது.
தேவராஜ் காணாமல் போன வைர நெக்லஸை தேடி உள்ளார். கிடைக்காத பட்சத்தில் குப்பையுடன் சென்று விட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உர்பேசர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உள்ளார். அதன் பின்னர் அப்பகுதியில் குப்பை சேகரித்த வாகன ஓட்டுனர் அந்தோணி சாமி அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் தீவிர சோதனை நடத்தினார்.
பின்னர் அந்த 5 லட்சம் மதிப்புடைய வைர நெக்லஸ் குப்பையில் இருந்ததை கண்டெடுத்த தூய்மை பணியாளர் அந்தோணிசாமி உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். வைர நகை மீண்டும் கிடைத்துள்ளது உரிமையாளருக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது தீயாக பரவி வருகிறது தூய்மை பணியாளர் அந்தோணி சாமியை பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.