தமிழக வெற்றி கழகத்திற்கான மாநாடு வருகின்ற 27 – ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை அக்டோபர் 4ஆம் தேதி மாநாட்டிற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இதனிடையே தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநாட்டிற்கு இடம் வழங்கிய 25 பேருக்கு மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கழகம் சார்பில் நேரில் சென்று அழைப்பை விடுத்துள்ளார்.
வருகின்ற அக்டோபர் 27 – ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றி கழக மாநாடு பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இதற்கான பூமி பூஜையானது நாளை அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடைபெற இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.