தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார். இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவை இரண்டாம் கட்ட விழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசிய பொழுது தமிழ்நாட்டில் நீட் பற்றி கண்டனத்தை தெரிவித்துள்ளார். நீட் விலக்கப்பட வேண்டும் என்பதே எனது பரிந்துரை என்றும் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
இடைத்தொடர்ந்து தமிழக கட்சித் தலைவர்களின் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜகவின் உறுப்பினர் தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவர்கள் மத்தியில் விஜய் இதுபோன்று பேசியது மாணவர்களின் ஊக்கத்தை குறைப்பதாகும் என்று விமர்சித்துள்ளார். மேலும் இவர்களைத் தொடர்ந்து பாஜகவின் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசனம் அவரது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தாலும் திமுக செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் விஜயின் கருத்து வரவேற்கத்தக்கது என்றும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.