தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான முதல் மாநாட்டையும் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் மக்களுக்கு கட்சியின் பல்வேறு கொள்கைகளையும் அறிவித்தார்.
கொள்கைகள் அறிவித்தது மட்டுமின்றி அவரின் அரசியல் எதிரி யார் என்றும் மக்களுக்கு தெரியப்படுத்தினார். விஜயின் நேரடியான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழகத்திற்கு பத்து மாத காலங்களில் 10 மில்லியன் உறுப்பினர்களை சேர்த்து வலுவான கட்சியாக நிலை நிறுத்தி உள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நா.ப. சிவா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வழக்கறிஞர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தருமபுரி மாவட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மற்ற பல கட்சிகளிலிருந்து விலகி தமிழக வெற்றி கழக கட்சியில் உறுப்பினராக இணைந்தனர். அப்பொழுது பேசிய சிவா நடிகர் விஜய் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்றும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இந்த செய்தியை கேட்ட கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். இருந்த போதிலும் நடிகர் விஜய் தருமபுரி மாவட்டத்தில்தான் போட்டியிடுவார் என்று எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.