உளுந்தூர்பேட்டையில் பள்ளி வளாகத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட குப்பையில் தவறி விழுந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் தீக்காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ….
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு. மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி மகன் காமேஸ்வரன் வயது 12 இவர் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவன் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தார் . அதற்கு முன்னதாக பள்ளி வளாகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை தீ வைத்துஎரித்து உள்ளனர். அந்த தீயை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த சூழலில்தான் மதிய உணவு இடைவெளியின் போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவன் சக மாணவர்களுடன் சென்றபோது எதிர்பாராத விதமாக தீ வைத்து எரிக்கப்பட்ட குப்பையில் தவறி விழுந்துள்ளார். இதில் மாணவனின் இரண்டு கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு துடிதுடித்து அழுது உள்ளார். இதனை அறிந்த சக மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட குப்பையில் மாணவன் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெற்றோர்களும் அதிர்ச்சியடைய செய்துள்ளது