பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தொகுதி வாரியாக த.வெ.க சார்பில் விலை உயர்ந்த வைர மோதிரங்கள் மற்றும் வைர கம்மல், உதவித்தொகை என மாணவர்களுக்கு விஜய் பரிசு பொருட்களை வழங்கினார்.
இந்த விழாவானது சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. மேலும் முதற்கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது. 9 மாணவர்களுக்கு விலை உயர்ந்த வைரக் கம்மல் மற்றும் வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த சென்னையில் சேர்ந்த பிரதிக்ஷா மற்றும் திருப்பூரைச் சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகிய மாணவிகளுக்கு விஜய் வைர கம்மலை பரிசாக வழங்கி கௌரவித்தார்.
பன்னிரண்டாம் வகுப்பை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் ஆறு இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். தர்மபுரியை சேர்ந்த தேவதர்ஷினி, சந்தியா மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த காவிய ஸ்ரீ, ஈரோட்டை சேர்ந்த கோபிகா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவியா மற்றும் ஜனனி, திருநெல்வேலி சேர்ந்த சஞ்சனா ஆயுஷ் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார். இதைத் தொடர்ந்து நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் சின்னத்துறைக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5000 வழங்கினார்.