தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் சில வேண்டுகோளை வைத்துள்ளார். அதில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோருக்கு தேவையான உதவிகளை த.வெ.க சார்பில் உடனடியாக செய்ய வேண்டும் என்றும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து விஜய் த.வெ.க கழக நிர்வாகிகள் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சென்று தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி வருகிறார்.