தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த கேப்டன் விஜயகாந்த் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். விஜயகாந்திற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவர் நடித்துள்ள படங்கள் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. இவர் நடிப்பு திறமைக்கும், பேச்சுத் திறமைக்கும் பல ரசிகர்கள் உண்டு. சினிமா வாழ்க்கையில் பல வெற்றியைப் பெற்ற விஜயகாந்த் அரசியலில் களம் இறங்கினார். சில வருடங்கள் அரசியல் வாழ்க்கையை வாழ்ந்து வந்த கேப்டன் விஜயகாந்த் திடீரென்று ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சில ஆண்டுகளாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவ்வப்போது குடும்பத்தினருடன் விஜயகாந்த் எடுக்கும் புகைப்படம் மட்டுமே ரசிகர்களுக்கு பகிரப்பட்டு வந்தது. நடிகர் விஜயகாந்திற்கு தற்பொழுது 71 வயதை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜயகாந்திற்கு திடீரென்று உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேப்டன் விஜயகாந்த்திற்கு தற்பொழுது உள்ள உடல்நிலையை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவ்வப்போது இதுபோன்று உடல்நிலை குறைவு ஏற்படுவது வழக்கமாக உள்ளது என்றும் கூறப்பட்ட வருகிறது. இது குறித்து தேமுதிக சில விளக்கத்தை கொடுத்துள்ளது. அதில் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக சில பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்வார் அதற்காகவே தற்பொழுதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.