வருகின்ற விக்கிரவண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்பொழுது அந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விக்கிரவண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம் என்று தொடங்கி ஜூலை 10 – ஆம் தேதி வருகின்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்குவாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.