கோவில்களில் வில்லுப்பாட்டு பாடி பிரபலமானவர் மாதவி.அண்மையில் ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார்.சமூக வலைதளங்களில் இவர் பாடிய வீடியோக்கள் நிறைய வைரலாகி வரும் நிலையில் இவர் கூறியது ஆச்சர்யமாக உள்ளது.இவர் எந்தவொரு சமூக வலைதளமும் தனக்கென பயன்படுத்தவில்லையாம்.இருந்த போதிலும் சில எதிர்மறையான விமர்சனங்கள் வருவதாக அறிந்திருக்கிறார்.
இதனை குறித்து ரசிகர்ளிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.தற்போது அழிந்து வரும் கலைகளில் வில்லுப்பாட்டும் இருக்கிறது. தற்போது வில்லுப்பாட்டு கோவில்களில் நடத்துவதும் குறைந்து வருகிறது.ஒருகாலம் வில்லுப்பாட்டு,நாடகங்கள் எல்லாம் புகழ்பெற்று இருந்தது .தற்போது மெல்ல மெல்ல அழிந்தும் வருகிறது.ரசிகர்களிடடையே ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.சிலர் இப்படி ஒரு கலை இருப்பதையே மறந்தும் போய்விட்டார்கள்.
அண்மை காலத்தில் வில்லுப்பாட்டு மாதவி பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.இவர் தென்காசி மாவட்டம் அச்சன்குன்றம் பகுதியை சேர்ந்தவர்.தந்தை கொத்தனார்,2 தங்கைகள் உள்ளனர்.19 வயதான இவர் வில்லுப்பாட்டில் ஆர்வம் கொண்டு 4 வருடங்களாக கோவில் நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இவர் பாடிய வீடியோக்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்ற நிலையில் சிலர் எதிர்மறை செய்திகளை பதிவு செய்துள்ளனர்.அதற்கு பதில் கூறும் விதமாக நான் எனக்கு பிடித்ததை செய்கிறேன்.
பிடிச்ச வேலைய பாத்துட்டு சந்தோசமாகத்தான் இருக்கிறேன்..உங்களை என்னோட நிகழ்ச்சி பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. பிடிச்சா வாழ்த்துங்க..இல்லையா விட்டுருங்க..தவறா பேசாதிங்க என்று கூறியுள்ளார்.நாம நல்லது பண்ணா நமக்கு நல்லது நடக்கும்..கெட்டது பண்ணா கெட்டது நடக்கும் அவ்ளோதான்.முடிஞ்ச அளவுக்கு நல்லது பண்ணுங்க என்று கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இந்த மாதிரி கலைகளை ஆர்வத்துடன் பணியாற்றி வரும் கலைகஞர்களை வளரவழி விடுங்கள்..அவமதிக்காதிர்கள்..என்று ரசிகர்கள் அதரவு அளித்து வருகின்றனர்.