கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 – ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக மூன்று கிராமங்கள் பரிதாபமாக மண்ணில் புதைந்தது. இந்த பேரழிவில் 3 கிராமத்தைச் 400 – க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் பலர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலச்சரிவு கேரள மாநிலத்தையே பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.