தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து தென்கிழக்கு அரபிக் கடல் அதனை ஒட்டி உள்ள மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, திருப்பூர் பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததில் சில பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பூர், கோவை, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.