இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள. மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அவ்வப்போது தூரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகாலை வேளையில் பனிமூட்டம் இருக்கும் என்றும் தாயும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 24ந் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது விட்டுவிட்டு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையானது 30° செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சூறாவளி காற்றானது 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.