கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் மாவட்டங்கள் கடும் வெள்ளப்பெருக்கை சந்தித்தது நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கனமழையானது கொட்டி தீர்த்தது. இதைத் தொடர்ந்து தற்பொழுது வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது அதன்படி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் நாளை தமிழக கடற்கரையோர பகுதிகள் மற்றும் காரைக்கால், புதுவை பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 31.12.2023 திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இதை தொடர்ந்து 01.01.2024 மற்றும் 02.01.2024 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.