தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வானிலை பனிமூட்டமாக காணப்படுகிறது. தற்பொழுது வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை முதல் ஓரிரு இடங்களில் கனமழை வரை செய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று தேனி, நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து அடுத்த மூணு மணி நேரத்தில் செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.