வளிமண்டல கீழ அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, தேனி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர், கரூர் ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டத்தின் அளவு சற்று அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.