தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற 11 – ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்துள்ளது. மேலும் அடுத்த மூணு மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.