தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் வருகின்ற 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் நனைக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.