தமிழக பகுதிகளில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட வருகின்ற இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டி உள்ள பகுதிகளை அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடம் என்றும் சென்னையை பொருத்தவரை வருகின்ற இரண்டு நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்பநிலை காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.