தமிழகத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலேயே நிலவுக்கூடும் என்றும் வருகின்ற 20 ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதை தொடர்ந்து 23ஆம் தேதி முதல் அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலேயே நிலவு கூடும் என்றும் தற்பொழுது நிலவி கொண்டிருக்கும் வெப்பநிலையை விட 23ஆம் தேதிக்கு பிறகு வெப்பநிலையின் அளவானது அதிகரிக்க கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என்றும் வருகின்ற இரண்டு நாட்களுக்கு தற்பொழுது நீடித்துக் கொண்டிருக்கும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.