தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. தென்னிந்திய பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நனைக்கும் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் வருகின்ற 22, 23 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை அவ்வப்போது பெயர் கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பை விட இன்று அதிகபட்ச வெப்பநிலையானது 102 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும். ஓரிரு இடங்களில் தூரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.