தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதை தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, தேனி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.